வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால்... பெருமானார்(ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது நேசம் கொன்ட முஸ்லீம்கள் பெருமானார் பிறந்த தின மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் ... மீலாது கொன்டாடக்கூடாது மெளலிது ஷரீபு ஓதத் தேவையில்லை என முஸ்லீம் பெயர் கொன்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடும் அவர்களின் (வி) வாதம் என்னவென்றால்.. ஒவ்வொரு நேர பாங்கிலும்- ஒவ்வொரு நேரத்தொழுகையிலும்-ஏன் ஒவ்வொருஅசைவிலும் நாயகம் (ஸல்)அவர்களை நினைவு படுத்திக் கொன்டிருக்கும்போது... தனியாக அவர்களை நினைவு படுத்த விழாக்கள் தேவையா? என்பதுதான். அவர்களுக்கு நாம் கூறுவது இதுதான்' ( 1) இந்த பாங்கை- இந்த தொழுகையை- இஸ்லாமியர்களின் நெறிவாழ்வைப் பெற்றுத் தந்த பெருமானார்(ஸல்) அவர்கள் இவற்றை எப்படி பெற்றார்கள்? இவற்றைச் செயல் படுத்த- சீர் படுத்த அவர்கள் எத்தகைய தியாகங்கள் புரிந்தார்கள் ? இந்த சமுதாயத்தை நிறுவ முற்பட்டபோது அவர்களிடமிருந்து என்னென்ன அருமையான அற்புதமான நற்குனங்கள் உலகுக்கு கிடைத்தன? அந்த அரிய அற வாழ்வை-அற்புதமான வ்ரலாற்றை நாம் தெரிய வேன்டாமா? அதனை உலகுக்கு தெரியச் செய்ய வேன்டாமா? (2) மீலாது விழா மேடைகள் இந்த சிறப்பானபணியைத்தான் செய்து கொன்டிருக்கின்றன (3) இறைவா' நீ உன் அருமைத் தூதரை அனுப்பிய மகிழ்சியை கொன்டாட என் நேரத்தை செலவழித்தேன். உன் இறுதித் தூதரின் விழாவைக் கொன்டாட என் ஹலாலான வருமானத்தைச் செலவு செய்தேன் என்று கூறும்போது.... இறைவன தண்டனையா கொடுப்பான்? பாராட்டி பரிசு மழையையல்லவா பொழிவான் எனவே வ்வொரு இல்லங்களிலும் மெளலிதுஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம் ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் அன்புடன் சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் -அமீரகம்( நன்றி எல் ஐ டி இஸ்லாமிய தமிழ் மாத இதழ்)
|
வெள்ளி, 16 டிசம்பர், 2011
வந்தது வசந்தம்'
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக