புதன், 14 டிசம்பர், 2011

முஹர்ரம் பேசுகிறேன்



முஹர்ரம்  பேசுகிறேன் 

 அன்பு நண்பர்களே ! என்னை த் தெரியுமா  உங் களுக்கு ! 
 
என் பெயர் முஹர்ரம் ஆங்கில வருடப்பிறப்பு  ஜனவரி எனவும் தமிழ்  வருடப்பிறப்பு  சித்திரை எனவும்
 நன்கு அறிந்து வைத்து இருக்கும்  நீங்கள்  இஸ்லாமிய  ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் என உங்களில்
குறைந்த சதவீதத்தினர்  தாம் அறிந்திருப்பீர்கள்  என நான் துணிந்து சொல்வேன்
என்னை வைத்துதான்  ஹிஜ்ரி ஆண்டு தொடங்குகிறது  முஹர்ரம் என்றால்  சங்கை செய்யப்பட்டது
கண்ணியமானது எனப்பொருள்  என்னை இஸ்லாம் அரபகத்தில்  அறிமுகமாவதற்கு  முன்பே  அரபு
மக்கள் புனித மாதங்கள் நான்கில்  ஒன்றாக மதித்து  வந்தார்கள் என்னில் தான் ஆஷூரா  எனும் முஹர்ரம்
 பத்தாம்  நாள் வருகிறது  இந்த நாளில் தான் நபிமார்களின்  வாழ்வில் முக்கிய வெற்றிகள் கிடைத்தது 
என நீங்கள்  அறிந்திருக்கலாம் 
ஆதம் அலைஹிஸ்சலாம்  அவர்களின்  தவ்பா  ஏற்று கொள்ளபபட்டதும் நூஹ்  அலை-ஹிஸ்சலாம்
அவர்கள் பிரளயத்திலிருந்து  காக்கப்படதும்  மூஸா அலைஹி சலாம்  அவர்கள் நைல்  நதியை
பிளந்து  ஃபிர்அவ்ன் இடமிருந்து  ஈடேற்றம்  பெற்றதும்  இப்ராஹீம்  அலை-ஹிஸ்சலாம்  அவர்கள்  
நம்ரூதின்     நெருப்புக் குண்டத்திலிருந்து  சுகமாக  வெளியே  வந்ததும் சுலைமான் அலைஹிசலாம்
 அவர்களுக்கு  ஆட்சி மீண்டும்  கிடைத்ததும்  இந்த நாளில் தான்  எனும் போது எனக்கொரு மகத்துவம் 
தனித்துவம் -புனிதத்துவம்  இருப்பதை  ஏற்று கொள்வீர்கள்  என நம்புகிறேன்
ஆனால் என்னில்தான்  ஓர் வரலாற்று சோகம் நிகழ்ந்து விட்டது என  என்னும் போது என் நெஞ்சே 
 வெடிக்கிறது  அது  என்ன சோகம் ?
அண்ணல் நபி  சல்லல்லாஹு  அலைஹி வசல்லம்  அவர்களின் அருமைப் பேரர் இமாம் -ஹுசைன்
(ரலியல்லாஹு அன்-ஹு) அவர்கள் கர்பலாக் களத்தில்  ஷஹீதாகபட்ட அந்தக் கொடிய  நிகழ்வுதான் 
 எனக்கொரு  சந்தேகம் !!
 
 முன்னர் வாழ்ந்த முஸ்லிம்களெல்லாம்  முஹர்ரம்   பத்தாம்  நோன்பு  பிடித்து கொள்வதோடு
போன்று  கர்பலாவில்  இமாம்  -ஹுசைன் (ரலியல்லாஹு அன்-ஹு ) அவர்களும்   அஹ்லே
பைதுக்களான நபி குடும்பத்தாரும்  செய்த ஒப்பற்ற  தியாகத்தை  நினைவு கூர்வார்கள்  ஆனால்
இன்றைய  முஸ்லிம்களிடம்  அந்தபேணுதல்-அந்த அக்கறை -அந்த முக்கியத்துவம் -அந்த
உணர்வு  சிறிதும்  தெரிய வில்லையே !!ஏன்??
 
என்னைப் பொறுத்தவரை  நான் இப்படி நினைப்பதுண்டு .
 
 கர்பலாக் களத்தில் கொடியவன் யஜீதால்-தண்ணீர் கூடத் தரபடாமல்  நாவரண்டு  வாடிய 
பெருமானாரின் திருப் பேரரின்  சோகத்தை  பகிர்ந்துகொள்ளதானோ  என்னவோ  இறைவன் 
அந்த  நாளில்  முஸ்லிம்கள்  நோன்பு வைத்து தண்ணீர்  பருகாமல்  வாடி இருக்கசெய்தான்
என எண்ணுவதுண்டு 
 
அன்பர்களே ! என்ன .... என் உணர்வும்  நினைவும் சரி தானே !!

 
நன்றி  அபூ ribtha

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக