செவ்வாய், 27 டிசம்பர், 2011

முஸ்லிம் உலகம்: இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...

முஸ்லிம் உலகம்: இஸ்லாமிய கட்டடக்கலையின் மற்றுமொரு மைல்கல்: உலகில் ...: 1.மிதக்கும் பள்ளிவாசல்-மலேசியா நீரால் சூழப்பட்ட ஒரு தீவைப்போன்று கோட்டா கின்பாலு பள்ளிவாசல் அமைந்துள்ளது.பள்ளிவாசலின்விம்பம் நீரி...

வெள்ளி, 23 டிசம்பர், 2011

Maula Ya Salli Wa Sallim (ORIGINAL VIDEO IN ARABIC)

ஹலோ, இணையத்தில் வலம் வருபவரே! உங்களைத்தான்!!



Thursday, December 1, 2011 12:24 AM

Message body

ஹலோ, இணையத்தில் வலம் வருபவரே! உங்களைத்தான்!!  

1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ./ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும்(Trash) வைக்காதீர்கள். 
ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை. அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள். 

2. நான் நைஜீரியா நாட்டின் பெரிய பணக்காரர் மனைவி. என் கணவர் பல்லாயிரக்கணக்கான கோடி அமெரிக்க டாலர் பேங்கில் வைத்துவிட்டு இறந்து விட்டார். இதனை எடுக்க யாராவது ஒருவரின் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் சம்மதித்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை மாற்றி, பின் எனக்குத் தாருங்கள். கமிஷனாக 10% தருகிறேன் என்று இமெயில், போன் எண் எல்லாம் கொடுத்திருப்பார்கள். பதில் கடிதம் அனுப்பினாலோ, போன் செய்தாலோ, உங்கள் போன் எண்ணை முதலில் வாங்குவார்கள். இரக்கம் வரும் வகையில் பேசி, வங்கிக் கணக்கும் வாங்குவார்கள். பின் நாம் தான் மற்றவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டி வரும். நம் வங்கிப் பணத்தை எல்லாம் மாற்றிக் கொண்டு போய்விடுவார்கள்.

3. இணைய தளங்களில் ஏதேனும் படிவத்தில் சிறு சிறு கட்டங்களில் அடிக்கடி தகவல்களை நிரப்ப வேண்டியதிருக்கும். இந்த பாக்ஸுகளுக்குள் பயணம் செய்திட மவுஸை எடுத்து கர்சரைக் கொண்டு செல்லும் வேலையெல்லாம் வேண்டாம். ஜஸ்ட் டேப் கீயைத் தட்டவும். பின் நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் ஷிப்ட் கீயுடன் டேப் கீயைத் தட்டவும்.

4. ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்தலாம். சிறியதாக்க மைனஸ் கீயை இணைக்கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இணைந்து அழுத்தப்பட வேண்டும்.
இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன் புறம் அழுத்த பெரிதாகவும் பின்புறம் அழுத்த சிறிதாகவும் மாறும். மேக் கம்ப்யூட்டரில் இது முழு திரையையும் பெரிதாக்கும்.

5. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து விண்டோக் களையும் இரு கீகளை ஒரு சேர இணைத்து அழுத்தி மறைய வைக்கலாம்; மீண்டும் அதனைப் பெறவும் செய்திடலாம். அந்த கீகள் : விண்டோஸ் கீ + எம் கீ; மற்றும் விண்டோஸ் கீ+ டி (D) கீ.

6. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

7.
 பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம். அன்பான வாசகத்துடன், அழகான ஒரு காட்சிக்கான லிங்க் தரப்பட்டு, அதில் கிளிக் செய்தால், உங்களுக்கென உள்ள படம் இருப்பதாகக் குறிப்பு கிடைக்கும். நம்ம ப்ரண்ட் தானே என்று அலட்சியாமாக, படத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். 
(நன்றி:தகவல் தொழில்நுட்பம்

வியாழன், 22 டிசம்பர், 2011

em hanifa song tamil

பத்ர் களம்: சஊதி நிதியும் சதியும்

பத்ர் களம்: சஊதி நிதியும் சதியும்: சஊதி நிதியும் சதியும் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் மூல மந்திரம்! சஊதி நிதி இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சிந்தனைக் குழப்பங...

ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளு...

பத்ர் களம்: வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளு...: இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் ...

பாத்திமா வாழ்ந்த முறை...

அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்?

செவ்வாய், 20 டிசம்பர், 2011


ஐரோப்பாவில் புதிய இறை இல்லங்கள் உதயம்

ஃபிரான்ஸின் 'Marseille - மர்ஸை'யில் புதிய மஸ்ஜித்
''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)'' (அல் குர் ஆன் 9:33)
இஸ்லாத்துக்கு எதிராக என்னென்ன பொய் மூட்டைகளை அவிழ்த்து விட முடியுமோ அவ்வளவையும் மிக சாமர்த்தியமாக மேற்கத்திய நாடுகளின் அரசும் அவைகளின் ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் அதே வேளையில் ஏக வல்ல அல்லாஹ்அவர்களின் அத்தனை சூழ்ச்சியையும் தவிடுபொடி ஆக்கியே வருகிறான் என்பதற்கு அந்நாடுகளில் இஸ்லாம் அதி வேகமாக பரவி வருவதே சாட்சியாக இருக்கிறது.மேலுள்ள திருக் குர் ஆனின் வசனம் கூட அதனை உறுதி செய்கிறது.
சுவிட்ஜர்லாந்தில் பள்ளிவாசல் மினாரா கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளியில் ஐரோப்பாவின் மிக முக்கியமான இரு நாடுகளான ஜெர்மனியிலும், ஃபிரான்சிலும் புதிதாக இரு இறையில்லங்கள் இறையொளி(லி)யை ஓங்கச்செய்ய எழுந்துள்ளன. அதை நிரூபிக்கும் விதமாக ஃபிரான்சிலும் ஜெர்மனியிலும் புதிதாக உயர்ந்தோங்கி நிற்கும் புதிய 
'மஸ்ஜித்'களே சாட்சி.
ஃபிரான்ஸில் மிகப்பெரிய பள்ளிவாசல்
பெண்ணியத்திற்கு கண்ணியம் அளிக்கும் ஹிஜாபை தடை செய்ய முயன்றுகொண்டிருக்கும் பிரான்ஸின்Marseille - மர்ஸை (ஃபிரென்ச் உச்சரிப்பு இதுதான்என்ற நகரத்தின் செயின்ட் லூயிஸ் என்ற பகுதியில் மிகப்பெரிய பள்ளிவாசல் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இந்நகரத்தில் மட்டும் சுமார் 2,50,000 முஸ்லிம்களும் பிரான்ஸ் முழுமைக்கும் சுமார் 60 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2012 ஆம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் 22 மில்லியன் யூரோமதிப்பிலான இப்பள்ளியில் குர் ஆன் வகுப்புகள், நூலகம், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் உள்ளடங்கியதாக இருக்கும்.
ஒரே நேரத்தில் சுமார் 7000 பேர் தொழுகை நடத்த முடியும். இப்பள்ளியில் அமையயுள்ள மினாராவானது 25 மீட்டர் (82 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். பிரான்ஸ் அரசு இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக எத்தனை எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஜெர்மனியில் புதிய இறை இல்லம் உதயம்
உண்மை மார்க்கமான இஸ்லாமிய மார்க்கம் ஐரோப்பாவில் அதிவேகமாக வளர்ந்து வருவதன் மற்றுமொரு மைல்கல்லாக, 21/05/2010 அன்று  
ஜெர்மனியிலும் மிகப்பெரிய பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது.
துருக்கியர்கள் அதிகமாக வாழும் பெர்லின் நகரின் குரூஸ்பெர்ங் பகுதியில் சுமார் பத்து மில்லியன் யூரோசெலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இப்பள்ளியின் கோபுரம் முழுமையும் கண்ணாடிகளால் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் ஆறு அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ள இப்பள்ளியில் நான்கு சிறிய மினாராக்களும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் இங்கே தொழுகைநடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறை இல்லத்திற்கு லெபனான் மற்று பாலஸ்தீனத்தை சார்ந்தவர்கள் மட்டுமே முழு பொருளூதவி அளித்துள்ளனர் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இதுபோன்று இன்னும் ஆயிரம் ஆயிரம் இறை இல்லங்கள் உலகம் முழுக்க கட்டியெழுப்பவும், அனைத்து இறை இல்லங்களும் முஸ்லிம்களால் நிரம்பிவழியவும் அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.
--

__,_._,___

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பெற்றோர்களே சற்று நில்லுங்கள்

Subject: FW: பெற்றோர்களே சற்று நில்லுங்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...


ஜீரம்சளிஇருமல் என்று தான் சிறு குழந்தைகளை அடிக்கடி நோய்கள் தாக்கும். ஆனால் நாகரிக உலகில் டென்ஷன்இதய நோய்சர்க்கரை நோய்;, மன பாதிப்புமனக்கஷ்டம்மனக்கவலைஹைபர் டென்ஷன் என்று இன்னும் பல புதிய நோய்கள் பெயர் குறிப்பிடாமல் குழந்தைகளை தாக்கிக்கொண்டு வருகின்றன. இத்தகைய நோய்கள் எல்லாம் நாற்பது வயது உடையவர்களுக்கு தான் வரும் என்பது நம்மில் பலர் எண்ணிக்கொண்டு இருந்தோம் அன்று. ஆனால் இன்று இது தவறு என்பது புரிந்து விட்டது.

தற்போது உலகம் நம் கையில் என்ற கணிப்பொறி காலமாக மாறி விட்டதால் குழந்தைகளுக்கு ஏற்படும் வெளி காயங்களை விடஉள் நோய் என்ற காயங்கள் அதிகமாகி விட்டன. சிறு வயதிலேயே சிறார்கள் தெரிந்தோ தெரியாமாலோ வீடியோ சாதனங்கள் என்ற கருவியினால் கரவப்பட்டு தாங்களின் முழு கவனத்தினையும் அதிகளவில் அதில் செலுத்துகிறார்கள். இதனால் அவர்கள் தாங்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதனை மறந்து விடுகிறார்கள். இறைவன் கொடுத்த பகுத்தறிவினை சிறந்த மற்றும் நல் அறிவிற்கு பயன் படுத்தாமல் பாழாக்கி விடுகிறார்கள் என்பதனை நினைக்கும் போது ஒவ்வொரு பெற்றோரும் வேதனை பட தான் வேண்டும்.

வீடியோ கேம்சார்டிங்வலையத்தளம்இணையத்தளம் என்று தான் அவர்களின் நேரங்களும்நாள்களும் மற்றும் காலங்களும் போய் கொண்டு இருக்கின்றன. படித்து அறிவுள்ள சந்ததிகள் வளர வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பதால்அவர்கள் பிள்ளைகளை நல்லா படிநல்லா படி என்று சொல்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் பெற்றhர்களை திட்டும் குணங்கொண்டவர்களாக அவர்கள் மாறவும் செய்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் ஒவ்வொரு இல்லங்களிலும் காண தான் செய்கிறோம். இதற்கு காரணமாக அமைந்து இருப்பது என்னவோ வீடியோ சாதன கருவிகளின் ஆதிக்கம் தான் என்று சொல்லலாம்.

பெற்றோர்கள் தன்னுடைய குழந்தைகளை அன்றாடம் கவனித்து கொண்டே வர வேண்டும். அவர்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள்எங்கு போகிறார்கள் எத்தகைய நண்பர்களுடன் பழக்கம் வைத்துகொள்கிறார்கள் என்பதனை அவர்களுக்கே தெரியாமல் கவனித்து வர வேண்டும். கவனிப்பு இல்லாமல்விட்டு விட்டால் அவர்கள் குடி பழக்கம்போதை பொருள்கள் பழக்கம் என்று இனம் புரியாத இன்னும் பல கெட்ட பழக்கங்களுக்கு சிறு வயதிலேயே ஆளாகி விடுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

'குழந்தைகளை முறையாக வளர்த்து பாதுகாத்து வரும் பெற்றோர்களுக்கு மறுமை நாள் வரை அல்லாஹ்வின் உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

எந்த பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் நல்ல விதமாக நடந்து ஒழுக்கத்துடன் வளர்த்து வருவார்களேயானால் அந்த பெற்றோர்களை நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாக அக்குழந்தைகள் இருப்பார்கள்.ஆதாரம் : புகாரி அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள)

ஒரு நாளின் மற்றும் மணி நேரங்கள் வரை வீடியோ கேம்மற்றும் கணிப்பொறி விளையாட்டு என்ற ஷைத்தான் முன்பாக உட்கார்ந்து இருக்கும் பல குழந்தைகள் சர்க்கரை நோய் ஐஐ என்ற நோயால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புள்ளி விவரமானது அறிக்கையாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மற்றும் கவர்ச்சிகரமான விளையாட்டுகளால் கவரப்பட்ட இவர்கள் அதிகமாக இதனால் பாதிக்கப்பட்டு பல நோய்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மே 06 – 2007அன்று நீரழிவு நோய் (Diabetes 2007) ஒரு நாள் மருத்துவ கருத்தரங்கமானது நடைபெற்றது. அதில் 250 க்கும் அதிகமான உலக மருத்துவ குழுவானது கலந்துக்கொண்டு மேற் குறிப்பிட்ட ஆய்வு அறிக்கையினை வெளியிட்டார்கள். உலகில் அதிகமான அளவில் மக்களை பாதிக்கக்கூடியதும் விரைவில் குணப்படுத்த முடியாத நோய் உண்டு என்றால் அது சர்க்கரை நோய் என்பது தான் என்ற கருத்தினையும் Dr. Maha Taysir Barakat, Consultant Endocrinologist and Medical & Research Director at Imperial College London Diabetes Centre (ICLDC) அவர்கள் கூறி உள்ளார்கள். மற்றும் அந்த மாநாட்டில் இன்னும் சில அதிர்ச்சியான தகவல்களையும் வெளிட்டார்கள். அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமான என்றும்நீரழிவு நோய் பாதிக்கபட்ட சிறு குழந்தைகள் என்று பார்த்தோமானால் 20சதவீதம் என்றும் குறிப்பிடுகிறது. இத்தகைய எண்ணிக்கை இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் சொன்னார்கள். வளை குடா நாட்டில் சராசரியாக 33 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள் அவர்களில் 3.5 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை குறிப்பிட்டார்கள்.

இன்றைய நாகரீக வாழ்க்கை முறையினாலும் மற்றும் துரித கதி செயல்பாடுகளாலும் Fast Food என்ற கடைகள் அதிகமாக ஆகி விட்டது. இத்தகைய சாலை ஓர கடைகளில் விற்கப்படும் தின்;பண்டங்களாலும் சிறார்களுக்கு நோய்கள் அதிகமாக வர வாய்ப்புண்டு. தின்பண்டங்கள் ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி அதில் என்ன என்ன சேர்த்து செய்கிறார்கள் என்பதினை நம்மில் பல பேர்கள் சிந்திப்பது இல்லை.
அதாவது

நம்முடைய பணத்தினை கொண்டே நாமே வியாதிகளை சேர்த்துக்கொள்கிறோம் என்ற ரீதியில் தான் போய்க்கொண்டு இருக்கின்றோம். இயற்கையாக விளையும் பழங்களை விட இத்தகைய Fast Food (or) Cheaper junk Food   உணவுகள் விலை குறைவாக இருப்பதால் அதிகமான பேர்கள் இதற்கு அடிமையாகி விட்டார்கள். இதனை உட் கொள்வதால் ஆரம்பத்தில் சிறுதாக நோய் கிருமிகள் தாக்கும் பின்னர் அதுவே கொஞ்ச கொஞ்சமாக மாறி உயிரினை மாய்த்து விடும். இத்தகைய உணவு பழக்கத்தால் 20 சதவீதமான இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து சமீபத்தில் வெளியாகி உள்ளது. இப்பொருட்கள் ஹாலாலனது மற்றும் ஹராமானாது என்று கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது. உடல் நலத்திற்கு நன்மையினை தரும் உணவுகளை விட தற்போது உடலுக்கு கெட்டினை தரும் எத்தனையோ உணவுப்பொருட்கள் சந்தைக்கு வந்து விட்டது.

எனவேஅன்பான பெற்றோர்களே! உங்கள் செல்லக்குழந்தைகளின் எதிர் காலத்தினை பற்றி சிந்தித்து,அவர்களுக்கு எத்தகைய பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதினை தாங்களை முடிவு செய்து கொள்ளவும். குர் ஆன்மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நம்முடைய சந்ததிகள் வளர வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர்களை நல் வழிப்படுத்துங்கள்.

உங்களுடைய காலங்கள் போய் கொண்டு இருக்கிறது. தற்போது தாங்களின் சந்ததிகளின் காலங்கள் எத்தகைய வழியில் இருக்க போகிறது கொஞ்சம் யோசனை செய்யுங்கள்.

' விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர்அவர்களுடைய சந்ததிகளும் விசுவாசத்தின் மூலம் அவர்களை பின்பற்றினார்கள், (அத்தகைய அந்தச் சந்ததியினரின் படித்தரங்கள் குறைவாக இருப்பினும் அவர்களின்பெற்றோர்கள் இருக்கும் உயர் பதவிக்கு அவர்களுடன் (சுவனபதியில்) அவர்களின் சந்ததியினரை சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய (பெற்றோர்களின் நன்மையான) செயல்களில் எதனையும் அவர்களுக்கு நாம் குறைத்து விடமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்ததைக் கொண்டு பிணையாக்கப்பட்டிருக்கின்றான்.திருக்குர்ஆன்: 52: 2

நம்முடைய பிள்ளைகள் ஆடம்பரத்தினை விரும்பதான் செய்வார்கள். ஆனால் அந்த ஆடம்பரம் ஆபத்தாக போய் விட்டால் என்ன செய்வது..அழகாய் ஆடை அணிவதையும் அழகை விரும்புவதையும் இஸ்லாம் ஒரு காலும் தடுக்கவில்லை. ஆனால் இதே விருப்பம் வரம்பு மீறிபோகுமானால் மனிதன் தன்னுடைய சொத்து முழவதையும் வீண் விரயம்வெட்டிச்செலவு மற்றும் பெருமைபகட்டு ஆகியவற்றால் பாழாக்கி விடுகின்றான்.

குழந்தைகளை தொழுக சொல்லுங்கள்திருக்குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ள சொல்லுங்கள்தீன் நெறி பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றினை அவர்களுடன் பகிரிந்துக் கொள்ளுங்கள். நபிமார்களின் வாழ்க்கை முறைகளை பற்றி அவர்களிடம் சொல்லுங்கள். மார்க்க சம்மந்தமான எத்தனையோ பல நூல்கள் அவர்களுக்கு பரிசாக கொடுங்கள். அவர்களின் அன்பினையும் பெற்று கொள்ளுங்கள். நல்லறிவு பெறக்கூடிய சந்ததிகள் உருவாகி கொண்டு இருப்பார்கள் நிச்சயமாக..

' தன்னுடைய பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறுமனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனுடைய தாய்,சிரமத்துடன் அவனைச் சுமந்திருந்துசிரமத்துடன் அவனைப் பிரசவிக்கின்றாள். (அவள்) கர்ப்பத்தில் அவனைச் சுமப்பதும்அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். முடிவாக இவன் வாலிபமாகி,நாற்பது வயதை அடைந்ததும், 'என் இரட்சகனே! நீ என் மீதும்என் பெற்றோர் மீதும் புரிந்த உன் அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்திநீ எதனைப் பொருந்திக்கொள்வாயோ அந்த நற்செயலைச் செய்யவும் (நல்லறிவை) நீ எனக்கு உதிக்கச் செய்வாயாக! எனக்காக என்னுடைய சந்ததியில் (உள்ளோரை) நீ சீர்திருத்தியும் வைப்பாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து உன் பக்கம் திரும்பி விட்டேன். நிச்சயமாக,நானோ (உனக்கு முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் (ஒருவனாகவும்) இருக்கிறேன்என்று கூறுவான்.'திருக்குர்ஆன் 46: 15.




2 1/2 சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97 1/2 காக்கப்படும்

Subject: 2 1/2 சதவீதம் ஏழைக்கு கொடுத்தால் 97 1/2 காக்கப்படும் 
 அகீமுஸ்ஸலாத் வஆதுஸ்ஸகாத்த  தொழுகையை நிலை நிறுத்தி(த் தொடர்ந்து தொழுது) வாருங்கள்! மேலும்  ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள்!அல்லாஹ் குர் ஆன் ஷரீபில் தொழுகையைப் பற்றி கட்டளையிடும் போதெல்லாம் ஜக்காத்தையும் இணைத்தே கூறுவது சிந்திக்கத் தக்கது  கலிமாவில்  லாஇலாஹ இல்லல்லாஹ் வை தொடர்ந்து முஹம்மதுற்றசூலுல்லாஹ்  எவ்வாறு இணை பிரியாமல் தொடர்ந்து வருகிறதோ அதே போல தொழுகையும் ஜக்காத்தும் பின்னிப் பிணைந்தே மார்க்கத்தில் வலியுறுத்தப்படுகிறது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில்  கலிமா- தொழுகை- நோன்பு - ஹஜ்ஜு இந்த நான்கும்  இறைவனோடு  தொடர்பை ஏற்படுத்திச் செய்யும் அமல்கள் ஆனால் ஜக்காத்து மட்டும் மனிதர்களின்  தொடர்பு இல்லாமல்  நிறை வேற்ற முடியாத கடமையாக  தனித்தன்மை பெறுகிறது  ஏழைகளுக்கு வழங்குவதை அவர்கள் துன்பம் துடைப்பதையே ஓர் இபாதத்தாக - இறை வணக்கமாக- தனக்குச் செய்த உபகாரமாக- அல்லாஹ் அங்கீகரிப்பது மிகவும் ஆராயத்தக்கது சதக்காவுக்கும்  ஜக்காத்துக்கும் வித்தியாசமுன்டு- சதக்கா ( தர்மம்) கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும்  ஆனால் ஜக்காத்தோ   கொடுக்காவிட்டால்  இறை தண்டனைக்கு  ஆளாக வேண்டி வரும் மனிதர்கள்  இரண்டு பிரிவுகளில்  அடங்கி விடுவர் ஒன்று ஏழை; மற்றொன்று  பணக்காரர் . இந்த இரண்டுவகைத் தன்மைகளுக்கும்  மனிதர்களில்  மாறி மாறி வரக்கூடியது  ஏழை  ஒரு நாள் பணக்காரராகவும் , சீமான் ஒரு நாளில் ஏழையாக மாறிடவும் வாய்ப்புண்டு ஏழை  ஒரு காலத்தில் சீமானாககும் போது தான் இருந்த ஏழ்மை நிலையை  உணர்வதற்காகவும்- சீமான் ஒரு காலத்தில்  ஏழையாகும் போது  சீமானாக இருந்து வழங்கிய ஜக்காத்தின் புண்ணியம் அந்த ஏழ்மை நிலையில் உதவவும் வாய்ப்பாகிறது ஆனால் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதன்  ஜக்காத்து கொடுப்பதன் காரணத்தால் - ஏழையாகி விட மாட்டான் என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்   ஆயிரத்து  நானூறு  ஆண்டுகளுக்கு  முன்னரே  இந்த பொருளாதாரப் புரட்சி சமூகத் திட்டத்தை  அருளிய அல்லாஹ்வும் இதனை அமுல் படுத்திய அண்ணல் நபி( ஸல்) அவர்களும் இதில் பல நுணுக்கமான விஷயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறார்கள் அது பின் வருமாறு 1- ஜக்காத்து வழங்கும் செல்வந்தன்  ஏழைக்கு  வழங்கும் போது அல்லாஹ்வின் பரக்கத்தை ஏழைக்கு கொண்டு சேர்க்கும் இறைவனின் பிரதி நிதியாக மாறிப்  போகிறான் 

ஏன் நடந்தது இந்த கர்பலா?(ஆஷுரா நாள்)


இஸ்லாத்தில் வருட ஆரம்பமான முஹர்ரம் மாதம் அதிலும் குறிப்பாக ஆஷுரா நாள், பல்வேறு நபிமார்களின் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயம், உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை பின்பற்றும் இந்த சமூதாயத்திற்கு இந்த மாதம் எதை தந்தது. நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் ஆஷுரா நாளில் இரண்டு நோன்புகளை தந்தது. வேறு என்ன தந்தது? வேறு என்ன? இந்த சமூதாயத்திற்கு தலை குனிவை தான் தந்தது! காரணம் என்ன?

இந்த சமூதாயத்தில் யாரை கண்ணியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதோ, யாரை நேசிப்பது ஈமான் என்று கூறப்பட்டதோ, யாருக்காக தொழுகையில் சலவாத் ஓதப்படுகின்றதோ, யாரு சுவனத்து இளைஞர்களின் தலைவர் என்று நபிகளாரால் சொல்லப்பட்டதோ, அல்லாஹ்வை நேசியுங்கள், என்னை நேசிப்பத்தின் மூலம் அல்லாஹ்வை நேசம் பெறுங்கள், என்னுடைய குடும்பத்தவர்களை நேசிப்பத்தின் மூலம் என் நேசத்தை பெறுங்கள் என்று கூறப்பட்டதோ, உங்களுக்கு அவர்களையே கொன்று சந்தோஷித்தால் பெருமையா? தலை குனிவா? அதுவும் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் மூலம் அது நடந்தது என்றால் கியாமத் நாள் வரை அந்த கரை நமது உடம்பில் படர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஏன் நடந்தது இந்த கர்பலா?

நேர்வழி பற்றி நடந்த சஹாபா பெருமக்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தில் எப்படியோ நுழைந்து விட்ட புல்லுருவிகள், அந்த நேர்வழி நடந்த சஹாபாக்களின் ஹழ்ரத் சித்தீக் ரழி... அவர்களை தவிர ஏனைய மூன்று சஹாபாக்களையும் ஷஹீதாக்கியது. பின்னும் அந்த வெறி தணியவில்லை. பின்னும் அந்த புல்லுருவிகளின் தாகம் தணியவில்லை. பிறகு இமாம் ஹசன் ரழி... அவர்கள் ஆட்சியை உமையாக்களின் கையில் ஒப்படைத்த பின்னும் அவர்களையும் விடவில்லை. அவர்களின் மனைவியான ஜ'அதா வை பணத்தால் வளைத்து உலக ஆசையை காட்டி இமாம் ஹசன் ரழி... அவர்கள் தூங்கும் போது விஷம் கொடுத்து ஷஹீதாக்கியது.

அதற்க்கு பின் தான் அந்த வெறியர்களின் பார்வை ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் மேல் பட்டது. எந்த வம்பிற்கும் போகாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மேலும் ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி... அவர்களை போல் சாந்த குணத்தில் இல்லாமல், வீரம் நிறைந்தவர்கள் என்பதால் இக்கொடியவர்கள் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை நெருங்க யோசிக்க வைத்தது. ஆனாலும் இவர்கள் உயிரோடு இருந்தது இவர்களின் கண்களை உறுத்தி கொண்டு தான் இருந்தது. இந்த நேரத்தில் தான் உமையாக்களின் சார்பில் முஆவியா விற்கு பின்னால் யஜீது ஆட்சிக்கு வந்தான். முஆவியாவாலே அமீராக பிரகனப்படுத்தப்பட்டான். (இஸ்லாமிய ஜனநாயக ஆட்சி, மன்னராட்சியில் நுழைந்தது)


இவன் குடிகாரனாக இருந்தான். ஒரு முறை சஹாபாக்களின் குழந்தைகளோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தான். அப்போது மதுவும் பரிமாறப்பட்டது. சஹாபாக்களின் குழந்தைகள் என்ன இது என்று யஜீதிடம் கேட்ட போது கிருஸ்தவ மதத்தில் இது ஆகுமாக்கப்பட்டது தான். அதனால் இன்று ஒரு நாள் மட்டும் ஈசாவின் மதத்தில் மாறி இதை குடித்துக்கொள்ளுங்கள் என்றான். மேலும் இஸ்லாம் தடை செய்து இருந்தும் ஒரு சேர இரு சகோதரிகளை திருமணம் முடித்து இருந்தான். இப்படிப்பட்ட யஜீதை இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் பை'அத் செய்ய மறுத்து விட்டார்கள். இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்கர் ரழி.... ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி... ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழி... ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரழி... ஆகியோரும் இந்த குடிகாரன் யஜீதை பை'அத் செய்ய மறுத்துவிட்டார்கள்.

ஜனநாயகம் தழைக்க வந்தது தான் இஸ்லாம். இஷ்டம் இருந்தால் தான் பை'அத் செய்ய முடியும். ஆனால் இந்த யஜீத் மற்றவர்கள் பை'அத் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக்கினான். அன்றைய தினம் மதீனா வின் கவர்னராக இருந்த வலீத் பின் உத்பா என்பவர்கள், இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் நபியின் குடும்பமாக இருந்த காரணத்தால் மென்மையை தேர்ந்தெடுத்தார்கள், ஆனால் நபிகளாரின் லஃனத் ல் பிறந்த மர்வான் இமாம் ஹுஸைன் மீது கடுமை காட்ட கூறினான். அதை இவர்கள் மறுத்து விட்டார்கள்.

மேலும் மேலும் நெருக்கடி கொடுக்கப்படவே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரழி... அவர்களை போன்றே மக்கா நோக்கி பயணம் மேற்கண்டார்கள். அங்கு கவர்னராக இருந்தவன் அமர் பின் சயீத் பின் ஆஸ். இவனும் இமாம் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தான். இது ஒரு பக்கம் இருக்க இராக் தேசத்தில் இருந்து இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை அழைத்து கடிதம் வர ஆம்பித்து விட்டது. இந்த கடிந்தங்களில் எங்களுக்கு தொழுக வைக்க சரியான இமாம் இல்லை. எங்களுக்கு மார்கத்தை போதிக்க சரியான வழிகாட்டி இல்லை. அதனால் நீங்கள் வாருங்கள் என்று எழுதி இருந்தார்கள். ஆரம்பத்தில் சிறிதளவே வந்து கொண்டிருந்த இக்கடிதங்கள் பின்னால் மூட்டை, மூட்டையாக வர ஆரம்பித்து விட்டது. பின்னர் கூட்டம் கூட்டமாக ஆட்களும் வந்து அழைக்க ஆரம்பித்தனர். (இதை இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் ஹழ்ரத் ஹுர் பின் யஜீத் ரழி... அவர்களிடமும், கர்பலாவில் எதிராக போரிட வந்த அந்த கயவர்களிடமும் காட்டினார்கள். இமாம் அவர்களுக்கு கடிதம் எழுதியவர்களே அங்கு போரிடவும் வந்து இருந்தார்கள், சில தோழர்களை தவிர). சிலர் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு தோல் கொடுத்தார்கள். அவர்களுள் ஹழ்ரத் முஸ்லிம் ரழி... ஹழ்ரத் ஹபீப் பின் மழாஹிர் ரழி... ஆகியோர் அடக்கம்.


சரியான இமாம் ஏன் இல்லை என்று ஈராக் வாசிகள் எழுதினார்கள் என்று சரித்திரங்களை புரட்டினால் கீழ் காணும் சம்பவங்கள் காட்சி அளிக்கின்றது. அவை, உமையாக்களின் ஆட்சியில் ஷரீஅத் காற்றில் பறக்க விடப்பட்டது. எகிப்தில் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின் அபீ சர்ஹ் ஆமிரி (முர்தத் ஆகி ஒரு அன்சாரி தோழரை கொன்றவன். மக்கா வெற்றியின் போது காபாவின் திரையை பற்றி இருந்தான், அவனை இழுத்து வரும் படி நபிகளார் கூறினார்கள், ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்காக மன்னிப்பு பெற்றவன்) என்பவன் ஸுபுஹ் உடைய தொழுகையை காலை 10.00 மணிக்கு நேரத்தை மாற்றி அமைத்தான். கூபா வின் கவர்னராக இருந்த வலீத் பின் அகபா பின் அபீ முயீத் என்பவன் நன்றாக குடித்து விட்டு ஸுபுஹ் தொழுகையை நான்கு ரக்'அத் தொழ வைத்தான். அங்கு நிறைந்து இருந்த சஹாபாக்களின் பிள்ளைகள் எல்லாம் என்ன இப்படி செய்கின்றாயே என்று கேட்டதற்கு இதற்க்கு மேலும் தொழ வைக்கவா என்று கேட்டான். (அல் பிதாயா வன் நிஹாயா, புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இன்னும் பல கிதாபுகள்).
மேலும் ஹழ்ரத் அலீ ரழி... அவர்களையும், குடும்பத்தவர்களையும் ஜும்மாவின் குத்பாவில் திட்டும் வழக்கம் முஆவியாவின் ஆட்சி முதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் ரழி... அவர்கள் தான் இவ்வழக்கத்தை நீக்கி,
என்ற வசனத்தை ஓதும் பழக்கம் ஆரம்பித்து வைத்தார்கள். ஹழ்ரத் அலீ ரழி... உடைய குடும்பத்தவர்களும், உறவினர்களும், தோழர்களும் காதால் கேட்டு கொண்டு தான் இருந்தனர்.
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

(தபரீ பாகம் : 4 ,பக்கம்: 188
இப்னுல் அசீர்: பாகம்: 3 பக்கம்: 234
அல்பிதாயா வன் நிஹாயா பாகம்: 8 பக்கம்: 259; பாகம்: 9 பக்கம்: 80; )

இதற்காக தான் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் கர்பலா நோக்கி சென்றார்கள். ஆனால் இன்று வஹ்ஹாபிகள் பதவிக்காக தான் இமாம் ஹுஸைன் ரழி... சென்றார்கள், இஸ்லாத்திற்காக இவர்கள் உயிர் துறக்க வில்லை என்று நாகூசாமல் கூறுகின்றார்கள். எப்போதும் ஹதீஸ் படியே வாழும் (?!?!?!?!?!?!?) இந்த வஹ்ஹாபிகள், ஹதீஸ்களை பார்த்து இருந்தால் இந்த பிரச்சனையை வந்து இருக்காது. காரணம் ஹதீஸ்களில் தெளிவாக வருகின்றது, இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் கர்பலாவில் கொல்லப்படுவார்கள் என்று. ஆனால் என்ன செய்வது யூதர்களிடம் வாங்கிய காசிற்கு ஏதாவது செய்ய வேண்டுமே, அதனால் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் மீது கை வைக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்கள், ஹழ்ரத் உம்முல் பழ்ல் ரழி... அவர்களிடம் கூறுகின்றார்கள் என்னுடைய இந்த மகன் எனது சமூகத்தாலேயே கொல்லப்படுவான், உம்முல் மூமினீன் அன்னை ஆயிஷா ரழி... மற்றும் உம்முல் மூமினீன் அன்னை உம்மு சல்மா ரழி... ஆகியோரிடம் இந்த மண்ணில் தான் ஷஹீதாக்கப்படுவான் என்று அந்த மண்ணும் கொடுக்கப்படுகின்றது. என்னுடைய மகன் ஹுஸைன் கர்பலா என்று சொல்லக்கூடிய இடத்தில் தான் கொல்லப்படுவான். இவை எல்லாம் ஹதீசுகளில் பதியப்பட்டவைகள். சொந்த கருத்து, சோக கருத்து அல்ல. இவ்வளவும் தெரிந்துமா இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் பதவிக்காக சென்று இருப்பார்கள்! நாம் யோசிக்க வேண்டாமா?

சரி! பதவிக்காக தான் சென்றார்கள் என்று இவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டால், இமாம் அவர்களை பின்பற்றும் அனைவரையும் அல்லவா அழைத்து சென்றிருக்க வேண்டும். பிள்ளை குட்டிகளை எதற்கு அழைத்து சென்றார்கள். அவர்களின் குடும்பத்தவர்கள் மட்டும் தானே மக்காவில் இருந்து பயணப்பட்டார்கள். மேலும், அங்கு சென்றும், நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்ல அனுமதியுங்கள் என்று தானே சொன்னார்கள், என்னிடம் பை'அத் செய்யுங்கள் என்று எங்கே சொன்னார்கள்? இமாம் அவர்களை பற்றி பேசும் போது நாவை அடக்கி வாசியுங்கள் வஹ்ஹாபிகளே! நபிகளாரின் கோபத்தை பெற்று மறுமை வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்.

இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் ஷஹாதத் பற்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் கூறுவதை பாருங்கள்:
Non Muslim Scholars About Imam Hussain

இந்த லிங்கை கிளிக் செய்தால் படிக்கலாம்

நமது நிலை என்ன?

ஒவ்வொரு கர்பலாவிற்கு பின்னும் இஸ்லாம் உயிர் பெறுகின்றது - அல்லாமா இக்பால். என்று சொன்னதற்கு ஏற்ப, கர்பலா என்பது இஸ்லாத்தை உயிர்பிக்க நடந்ததே தவிர பதவிக்காக இல்லை. அப்படி பதவிக்காக செல்பவர்கள் 6 மாத குழந்தை அலி அஸ்கர் ஐ ஷஹீதாக்குவார்களா, 1 வயது குழந்தை அப்துல்லாஹ்வை முத்தமிட்டவாறு ஷஹீதாக்குவார்களா?? 18 வயதுடைய வாலிபரான அலி அக்பரை ஷஹீதாக்குவார்களா? உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று விட்டால் குழந்தை என்ன? குட்டி என்ன? வாலிபன் என்ன? கிழவன் என்ன? என்றவாறு அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தார்கள் என்பது தான் உண்மை.

இமாம் ஹுஸைன் ரழி..., உண்மையில் ஈராக் வாசிகள் உள்ளமையோடு அழைக்கின்றார்களா, இல்லை குழப்பம் விளைவிக்க அழைக்கின்றார்களா என்று அறிவதற்காக இமாம் முஸ்லிம் பின் அகில் ரழி... அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று குழப்பம் விளைவிக்க அல்ல, உண்மையில் தான் அழைக்கின்றார்கள் என்று கூறிய பின், ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழி... அவர்கள் தடுத்தும், குழந்தை குட்டிகளை விட்டுச்செல்லுங்கள் என்று கூறியும் கேளாமல், உங்களுடைய நிலை ஹழ்ரத் உஸ்மான் ரழி... போன்றே பெண்கள், குழந்தைகள் முன்னாள் ஷஹீதாக்க்ப்படுவீர்கள் என்று கூறப்பட்டும் கேளாமல், நபிகளாரின் சொல்லப்பட்ட ஹதீசுகளை உண்மை படுத்த துல்ஹஜ் மாதம் 8 ம் தேதி மக்காவை விட்டு ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... புறப்பட்டார்கள்.

வழியில் இமாம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், இமாம் அவர்களின் தங்கையான ஹழ்ரத் ஜைனப் ரழி.... அவர்களை மணந்த ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜஃபர் ரழி... அவர்கள், இமாம் அவர்கள் ஈராக்கை நோக்கி செல்ல வேண்டாம் என்ற கோரிக்கை கடிதம் வந்தது. அதற்க்கு பதில் அளித்த இமாம் அவர்கள், நான் ஒரு கனவை கண்டேன். என்னிடம் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒரு வேலையை ஏவி இருக்கின்றார்கள். அது என்னவென்று அல்லாஹ்வை சந்திக்கும் வரை கூற மாட்டேன் என்று தான் ஷஹீதாக போவதை சூசகமாக அறிவித்து விட்டு மக்காவை விட்டு ஈராக்கை நோக்கி பிரயாணப்பட்டார்கள்.


இந்த நேரத்தில் கூபாவில் கவர்னராக இருந்த ஹழ்ரத் நுஃமான் பின் பஷீர் அன்சாரி ரழி... அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு யஜீதின் சகோதரனான இப்னு ஜியாத் என்பவன் நியமிக்கப்பட்டான். இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை ஷஹீதாக்கும் வரை நிம்மதியாக உறங்கவும் கூடாது, சரியாக உண்ணவும் கூடாது என்று யஜீதால் கட்டளை இடப்பட்டது.

கவர்னராக நியமிக்கப்பட்ட இப்னு ஜியாத் முதலில் ஹழ்ரத் ஹானி பின் உர்வா ரழி... அவர்களை பிடித்து இமாம் முஸ்லிம் ரழி... அவர்களை ஒப்படைக்குமாறு கூறினான். அவர்கள் மறுத்துவிடவே வயது முதிர்ந்த இந்த சஹாபியை சிறையில் அடைத்தான். இதை கேள்விப்பட்டு படையை திரட்டி வந்தார்கள் ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்கள். அந்த படை இப்னு ஜியாதின் பயம் கலந்த பேச்சில் பயந்து இமாம் முஸ்லிம் ரழி... ஐ விட்டு கிளம்பினார்கள். இறுதியாக தனித்து விடப்பட்ட ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்கள் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். அதையும் கேள்வியுற்ற இப்னு ஜியாத் 450 பேர் கொண்ட படையை ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்களை பிடித்து வர அனுப்பினான். அதில் அநேகம் பேரை பந்தாடினார்கள் ஹழ்ரத் முஸ்லிம் ரழி... நேரிடையாக இமாம் முஸ்லிம் அவர்களை எதிர்க்க துணிவில்லாத அந்த படை நாளா புறமும் சுற்றி வளைத்து கற்களால் அடிக்க ஆரம்பித்தது. இதில் சோர்வடைந்த இமாம் முஸ்லிம் ரழி... அவர்களை பிடித்து, இப்னு ஜியாத் முன் அழைத்து சென்றது. அங்கு ஹழ்ரத் அமீருல் மூமினீன் அலீ முர்தழா கர்... அவர்களையும், ஹழ்ரத் இமாம் ஹுஸைன் அவர்களையும் லஃனத் செய்தான் இப்னு ஜியாத். பின்பு ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்களை ஷஹீதாக்கும் படி உத்தரவிட்டு அது நடந்தேறியது. பின்பு ஹழ்ரத் ஹானி பின் உர்வா ரழி... அவர்களை சிலாட்டரில் ஆடுகளை அறுப்பதை போன்று அறுக்குமாறு உத்தரவிட்டான்.

அவர்களின் உடல்கள் தெரு தெருவாக கயிறு கட்டி இழுக்கப்பட்டது. இறந்தவர்களின் உடலை சின்னாபடுத்த்ப்படும் வழமையும் உமையாக்களின் ஆட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. மேலும் ஷஹீதானவர்களின் தலையும் தெரு தெருவாக பார்வையக்கப்பட்டதும் இந்த ஆட்சிகளில் தான்.


வழியிலேயே இமாம் முஸ்லிம் ரழி... அவர்கள் கோரிக்கைப்படி இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுக்கு கூபாவின் பக்கம் வர வேண்டாம், இவர்களின் மனம் மாறிவிட்டது என்று எழுதப்பட்ட கடிதமும் வந்து சேர்ந்தது. ஜுபாலா என்னும் இடத்தில் இமாம் முஸ்லிம் ரழி... மற்றும் ஹழ்ரத் ஹானி பின் உர்வா ரழி... ஆகியோரின் ஷஹீதான செய்தியும் வந்து சேர்ந்தது. மேலும் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் வருகையை தெரிந்து கொண்ட இப்னு ஜியாத் ஹழ்ரத் ஹுர் ரழி... அவர்களை பறக்கும் படையாக அனுப்பி பிடித்து வருமாறு கட்டளை இட்டான். வரும் வழியில் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை ஹழ்ரத் ஹுர் ரழி... அவர்கள் சுற்றி வளைத்து இமாம் அவர்களோ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே திரும்பி விடுகின்றேன் என்று ஹழ்ரத் இமாம் ஹுர் ரழி... இடம் கூறினார்கள். அதற்க்கு மறுத்த ஹழ்ரத் ஹுர், இப்னு ஜியாதை சந்திக்க வைப்பது தான் தன்னுடைய பணி என்றும் அது தான் தனக்கு இடப்பட்ட கட்டளை என்றும் கூறினார்கள். அதற்கு இமாம் அவர்கள் அவனை சந்திப்பதை விட இறப்பதே மேல் என்று கூறினார்கள்.

இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் முன்னேறி செல்லும் போது இப்னு ஜியாத் இடம் இருந்து ஹழ்ரத் ஹுர் ரழி... அவர்களுக்கு கடிதம் வந்தது. அதில் இமாம் ஹுசைன் அவர்களையும், அவர்களோடு இருப்பவர்களையும் மரம் இல்லாத, கட்டிடம் இல்லாத, ஆறோ, குளமோ, குட்டையோ, ஏரியோ இல்லாத இடத்தில் இறக்குமாரும், விரைவில் தமது படை வந்து எதிர் கொள்ளும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதை வைத்து கர்பாலாவில் இமாம் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

மறுமையில் யாரு கௌசர் தண்ணீர் நமக்கு தருவார்களோ, அந்த குடும்பத்தவர்களே மூன்று நாட்கள் பச்சை தண்ணீர் கூட அருந்த வில்லை. இமாம் ஹுஸைன் ரழி... நினைத்து இருந்தால் எத்தனையோ நீரூற்றுக்களை கண்சிமிட்டும் நேரம் கொண்டு வர முடியும். ஆனாலும் அல்லாஹ் ஜல்... வின் பொறுத்தத்திற்காக பொறுமை காத்தார்கள். ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்கு பகரமாக இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை பழி வாங்குகின்றார்களாம். சிறு குழந்தைகள் உட்பட யாருக்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை. எத்தனை பேரிடத்தில் அதுவும் அஹ்லே பைத்திடம் ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்காக பழிவாங்குவார்கள் என்பது தெரியவில்லை. ஹழ்ரத் இமாம் அலீ ரழி... அவர்களோடும் இதே காரணங்களை கூறி போரிடப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இப்னு ஜியாத் இடம் இருந்து காபிர்களை நோக்கி போரிட இருந்த படை (அந்த படையினரின் கெட்ட நேரம்) இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை நோக்கி அனுப்பப்பட்டது. இமாம் அவர்களோ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே திரும்பி விடுகின்றேன் என்றார்கள். மேலும் கடிதம் எழுதிய அநேகம் பேர் அங்கிருந்தார்கள், அவர்களின் கடிதங்களை காட்டும் போது, இன்றைய வஹ்ஹாபிகளை போன்றே அவர்களும், அவர்கள் எழுதிய கடிதத்தையே மறுத்தார்கள்.

போர் மூண்டது முதலில் போரிட்ட முஸ்லிம் என்ற ஸல்... அவர்களின் சஹாபி ஷஹீதானார்கள், பிறகு இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் உயிர் (தியாகம் செய்யும்) நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அப்படியே தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தார்கள்.

போர் நடந்து கொண்டிருக்கும் போது முஸ்லிம் என்ற பெயரில் எதிரிப்படை இருந்த நிலையிலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் தொழுகை நடத்த அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது. மாறாக, இன்றைய வஹ்ஹாபிகளை போல கிண்டல் அடித்தார்கள். மேலும் போர் நடந்து கொண்டிருக்கும் போது, பெண்கள் தங்கியிருந்த கூடாரத்தில் புகுந்த ஷும்ர் தலைமையிலானா கொள்ளைக்கூட்டம் (இப்னு ஜியாதின் படையினர்) அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தது (அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காரணம் அங்கு ஒன்றும் இருக்க வில்லை).

நண்பர் வட்டம் முடிந்த பிறகு அஹ்லுல் பைத் யிலிருந்து இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் மகனான ஹழ்ரத் இமாம் அலி அக்பர் ரழி... அவர்கள் களம் புகுந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு கவிதையை படித்தார்கள்.
انا علي ابن الحسين ابن علي
نحن وبيت الله اولى بالنبي
تالله لايحكم في نبن البغي(بدعي)
كيف ترون ستري عن ابي

நான் அலீயாவேன், ஹழ்ரத் ஹுஸைனின் மகன், ஹழ்ரத் அலீ யின் பேரமகன். நாங்களும் (அஹ்ல பைத்) இறை இல்லமாம் க'பாவும் நபிகள் ஸல்... அவர்களால் முதன்மை படுத்தப்பட்டோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக ராஜ துரோகியின், காட்டுமிராண்டியின் (மற்றொரு அறிவிப்பில் பித்'அத் வாதியின் மகன்) மகன் யஜீத் எங்கள் மீது ஆட்சி செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நான் என்னுடைய தகப்பனாரை எவ்வாறு பாதுகாப்பாக (போரிட்டவாறு) இருக்கின்றேன் பார்த்தீரா? என்று பாடிய வண்ணம் போர் களத்தில் புகுந்தார்கள். (அல் பிதாயா வன் நிஹாயா.)

இமாம் அலீ அக்பர் ரழி... அவர்களின் அடியை தாங்க முடியாத எதிரிப்படை சிதறுண்டது. அதனால் இமாம் அலீ அக்பர் ரழி... அவர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தி கீழே சாய்த்தார்கள். பின்பு அவர்களின் உடல் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டது.

அதன் பிறகு அஹ்லே பைத்திலிருந்து ஒவ்வொருவராக வந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அதில் ஹழ்ரத் இமாம் ஹஸன் ரழி... அவர்களின் மகனார் ஹழ்ரத் காசிம் ரழி... அவர்களும் ஷஹீதானவர்களில் அடக்கம். இமாம் காசிம் ரழி... அவர்களை எதிரிப்படையை தலைமை தாங்கி கொண்டிருந்த உமர் அல்லது அமர் என்பவன் ஷஹீதாக்கினான். எனது சிறிய தந்தையே என்று சப்தமிட்டார்கள். ஓடோடி வந்த இமாம் ஹுஸைன் ரழி... உமர் மீது தாக்கினார்கள். அவன் அதை கையால் தடுத்ததால் அவன் கை துண்டானது. அஹ்லே பைத் திலிருந்து மொத்தம் 17 நபர்கள் ஷஹீதானார்கள். அவர்களுள் சிறு குழந்தைகளான ஹழ்ரத் அலீ அஸ்கர் ரழி... மற்றும் ஹழ்ரத் அபூபக்கர் ரழி... ஆகியோரும் அடக்கம்.

இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுக்கு முன் கடைசியாக பெரியவர்களில் ஷஹீதானவர்கள் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் பதாகையை சுமந்து கொண்டிருந்த இமாம் அவர்களின் சகோதரர் ஹழ்ரத் அப்பாஸ் ரழி... ஆவர்கள். இவர்களின் ஷஹாததிற்கு பின் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் தனித்து விடப்பட்டார்கள். ஆனாலும் அந்த நிலையிலும் எதிரிகள் இமாம் அவர்களை நோக்கி முன்னேற தயங்கினார்கள். காரணம் இமாம் அவர்கள் வீரம் மிகுந்தவர்கள். இரண்டாவது காரணம் மன உறுத்தல், நாம் தானே அழைத்தோம், இப்படியாகி விட்டதே. இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் பெண்களோடு அவர்கள் தங்களுக்கு பின் எப்பிடி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு இருந்து சிறு குழந்தையான அபுபக்கரை மடியில் வைத்துக்கொஞ்சி கொண்டிருந்தார்கள். அப்போது ஹுர்முளா என்ற ஒரு கயவன் அம்பை எய்தினான். அது அந்த குழந்தையின் கழுத்தில் குத்தியது. இமாம் அவர்களின் மடியிலேயே அக்குழந்தை ஷஹீதாகியது. பின்பு இமாம் அவர்கள் வெளியில் வந்து ஷஹீதாகிய சடலங்களை ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தார்கள். எதிரிகள் இமாம் அவர்களை நெருங்கவே இல்லை. பிறகு பெண்கள் பக்கம் நெருங்கினார்கள். அப்போது அங்கிருந்த அலி அஸ்கர் என்ற குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். எதிரிகளில் மூகிதுன் நார் என்பவன் அம்பு எய்த அது இமாம் அலீ அஸ்கரின் தொண்டையில் இறங்கியாது. அம்பை பிடுங்கிய இமாம் அவர்கள் இரத்தத்தை பிடித்து அல்லாஹ்விடம் சாட்சியாக்கினார்கள்.

பிறகு இமாம் அவர்கள் வெளியேறினார்கள். புறாத் ஆற்றை நோக்கி சென்றார்கள். அங்கு தண்ணீர் எடுத்து குடிக்கும் போது ஒரு அம்பு இமாம் அவர்களை நோக்கி வந்தது. இமாம் அவர்களின் வாயில் குத்தியது. இமாம் அவர்கள் அம்பை பிடுங்கி பீறிட்டு வந்த குருதியை அல்லாஹ்விடம் சாட்சியாக்கி, அல்லாஹ்விடம் இவர்களின் கணக்கை மறுமையில் வைத்துக்கொள்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அம்பு எய்தவனையும் சபித்தார்கள். அதன் காரணமாக அவனுக்கு தாகம் ஏற்பட்டது. அதன் கடுமையாலே மரணத்தை தழுவினான். பிறகு இமாம் அவர்கள் போர்க்களம் சென்றார்கள். யாரும் இமாம் அவர்களை எதிர்க்க துணிவில்லை.

இமாம் அவர்கள் , ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்காக பழி வாங்குகின்றோம் என்று கூறப்பட்டதால் தான் யார் என்று ஒரு கவிதையை இமாம் ஹுஸைன் ரழி... அங்கே படித்தார்கள்.
اَنَا ابْنُ عَلِيّ الْخَيْرِ مِنْ الِ هَاشِمِ
كَفَانِيْ بِهذَا مَفْخَرٌ حِيْنَ اَفْخُرُ
وَجَدّيْ رَسُوْلُ اللهِ اَكْرَمُ مَنْ مَشى
وَنَحْنُ سِرَاجُ اللهِ فىِ النَّاسِ يَزْهُرُ
وَفَاطِمَةٌ اُمّيْ سُلاَلَةُ اَحْمَدِ
وَعَمّيَ يُدْعى ذَالْجَنَاحَيْنِ جَعْفَرُ
وَفِيْنَاكِتَابُ اللهِ اُنْزِلَ صَادِقًا
وَفِيْنَا الْهُدى وَالْوَحْيُ وَالْخَيْرُ يُذْكَرُ
وَنَحْنُ اَمَانُ اللهِ لِلْخَلْقِ كُلّهِمْ
نَقُوْلُ بِهذَا لِلاَمَانِ وَنَجْهَرُ
وَشِيْعَتُنَا وَاللهِ اَكْرَمُ شِيْعَةِ
وَمُبْغِضُنَا يَوْمَ الْقِيَامَةِ يُخْسَرُ

இதில் தனது தந்தை யார், தாய் யார், பாட்டனார் யார், பெரிய தந்தை யார், யாரிடம் குர்'ஆன் இறக்கப்பட்டது. எங்களை இந்த சமூதாயத்தில் அமானிதமாக ஒப்படைத்தார்கள் நபிகளார் என்றும், அதுவே ஈமான் என்றும், எங்கள் மீது யார் பொறாமை கொள்வாரோ அவரின் மறுமை வாழ்வு அழிக்கப்படும் என்று பொருள் பட இக்கவிதையை படித்தார்கள்.

இதை படித்ததும் எதிரிகள் இமாம் அவர்களை தாக்க துணிந்தார்கள். இமாம் அவர்களும் தாக்கினார்கள். இமாம் அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கூட்டம் சிதறுண்டது. பிறகு ஒன்று பட்டு ஒட்டு மொத்தமாக இமாம் அவர்களை சுற்றி நின்று தாக்க ஆரம்பித்தார்கள். இமாம் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட் உடைக்கப்பட்டது. தலைப்பாகையை அணிந்த இமாம் அவர்கள் மீண்டும் போரிட்டார்கள். அப்படியே இமாம் அவர்களின் இடது கையும் துண்டிப்பட்டது. இமாம் அவர்கள் வலது கையில் வாளை எடுத்து போரிட்டார்கள். சினான் பின் அனஸ் என்பவன் இமாம் அவர்கள் புனித மிகு நெஞ்சத்தில் ஈட்டியை பாய்ச்சினான். நிலை தடுமாறி இமாம் அவர்கள் கீழே விழுந்தார்கள். சுதாரித்து எத்தனிக்கையில் ஷுமர் என்பவன் இமாம் அவர்களின் புனிதமிகு நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுக்க முனைந்தான். அப்போது இமாம் அவர்கள் நபிகளார் ஸல்... அவர்கள் உண்மை கூறினார்கள் என்று உரைத்தார்கள். அது என்ன? நபிகளார் ஸல்... அவர்கள் கூறினார்கள் எனது அஹ்லே பைத் உடைய ரத்தத்தை ஒரு மரநாய் குடிக்கும் என்றார்கள். இந்த ஷுமர் வெண்குஷ்டரோகி. அதனால் மரநாய் என்று குறிப்பிட்டார்கள். இமாம் அவர்களை ஷுமர் ஷஹீதாக்கினான்.

இமாம் மற்றும் ஷுஹதாக்களின் தலைகள் ஈட்டியில் எந்தப்பட்டு தெருக்களில் பார்வையாக்கப்பட்டது. யார் மூலம் பர்தா இந்த உலகத்தில் அறிமுக மானதோ அந்த குடும்பத்தின் பெண்கள் தெருக்களில் பர்தா இல்லாமல் அலைக்களிக்கப்பட்டனர். யார் நபிகளாரின் மீது சவாரி செய்து நபிகளார் சவாரி மட்டும் சிறந்தது அல்ல சவாரி செய்பவரும் சிறந்தவர் (திர்மிதி) என்று கூறினார்களோ, அந்த புனித உடல்களின் மீது குதிரைகள் ஒட்டப்பட்டு, உடல்கள் சின்னா படுத்தப்பட்டன. (தபரீ, பிதாயா) ஷியாக்களின் அறிவிப்பு என்று இதை கூற முடியவில்லை. காரணம் ஷுஹாதாக்களின் தர்காக்கள் தொலைவில் இருக்கின்றது. இமாம் ஔன் என்ற இடம், இமாம் ஹுர் உடைய மகாம், ஹழ்ரத் ஹபீப் பின் மழாஹிர் உடைய தர்பார் (இமாம்களோடு இருந்து போர் புரிந்தவர்கள்) எல்லாம் தொலைவில் இருக்கின்றது.

இமாம் அவர்களின் புனித தலை இப்னு ஜியாதின் மத்தியில் கொண்டு வரப்பட்ட போது, அவன் இமாம் அவர்களின் மூக்கில் கம்பை வைத்து (இமாம் ஹுஸைன் ஐ) போல அழகை நான் பார்க்கவில்லை என்று கூறினான் (ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரழி..., திர்மிதி). இறந்தவர்கள் எப்பிடி இழிவு படுத்தப்பட்டார்கள் பாருங்கள். மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் இரு உதடிற்கு மத்தியில் அந்த கைத்தடியை வைத்தான் அதற்க்கு அங்கிருந்து சஹாபா பெருமக்கள் வாக்குவாதமே செய்தார்கள். அவர்களையும் தரக்குறைவாக பேசினான் என்பதையும் வரலாற்றில் பார்க்கலாம்.


அஹ்லே பைத் களின் மீது நாம் உண்மையாக பாசம் வைக்க வேண்டும். கர்பலா வின் நோக்கமே, அதிகாரம் தனியாக இருக்க வேண்டும். அந்த காலத்தில் அதிகாரி யாரோ அவர் தான் தொழ வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அது மாற வேண்டும். கர்பலா நடந்தேறாமல் இருந்து இருந்தால் எந்த ஆலிமும் பள்ளியில் தொழ வைத்திருக்க முடியாது. ஆட்சி தான் பிடிக்க வந்தார்கள் என்று குற்றச்சாட்டு இன்று PJ கோஷ்டிக்களால் கூறப்படுகின்றது. இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் ஈராக் வந்து தான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதல்ல. மக்காவில் இருந்த வண்ணம் எப்பிடி ஹழ்ரத் இப்னு ஜுபைர் ரழி... ஆட்சி பிடித்தார்களோ அப்படி பிடித்திருக்க முடியும் (ஹழ்ரத் இப்னு ஜுபைர் கூட இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை தலைமை தாங்க சொன்னார்கள்). இமாம் அவர்கள் ஆட்சியை விரும்பவில்லை.

மேலும் இந்த PJ இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுக்கு பழைய பைத்தியம் பிடித்தது, பழைய கிறுக்கு பிடித்தது என்று கூறுகின்றார். அந்த வீடியோ வை பார்க்க வேண்டுமானால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Pj About Sahaabaa


நாவடக்கம் பற்றி தெரியாத PJ சஹாபாக்களை எல்லாம் திட்டி கடைசியில் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களையும் திட்டுகின்றான் என்றால் இவரை என்னவென்பது. மார்கத்தில் ஒன்றும் தெரியாது என்று தானே விளங்க முடிகின்றது. நபிகளாரின் குடும்பத்தவர்களின் சிறப்பானது, அவர்களுக்கு சதகா பொருளும், ஜகாத் பொருளும் ஹராமானவை. இன்று இருக்கின்ற சாதாத் மார்கள், சையது மார்கள், மௌலானாக்கள், தங்கள் கள் அனைவருக்கும் இந்த சட்டம் இன்றளவும் இருக்கின்றது. இதை சில வருடங்களுக்கு முன் மதுரையில் ஒபுளாபடித்துறையில் பேசிய PJ. இது சிறப்பல்ல. ஏன் தெரியுமா நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சதகா, ஜகாத் பொருளை ஹராமாக்கினார்கள்? பின்னால் வரும் என்னுடைய வாரிசுகள் மக்களை சுரண்ட ஆரம்பித்து விடுவார்கள். இதனால் தான் தடை செய்தார்கள் என்று துணிந்து பொய் சொல்லி விட்டு சென்று இருக்கின்றார். அந்த ஒலி நாடா நம்மிடம் உள்ளது. ஆக இந்த மனிதரின் சிந்தனையை பாருங்கள்.

நமது இமாம்களை பாருங்கள், ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி... அவர்கள் நபியின் குடும்பத்தவர்களே உங்களுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பை கூறினாலே மக்கள் உங்கள் சிறப்பு என்ன வென்று தெரிந்து கொள்வார்கள். அது என்ன தெரியுமா?
من لم يصلي عليكم فلا صلوة له

உங்கள் மீது யாரு ஒருவன் தொழுகையின் போது சலவாத் கூறவில்லையோ அவனது தொழுகை (பரிபூரணமான) தொழுகையே அல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் நபிகளாரை தாங்கள் செய்த மார்க்க தியாகத்திற்காக ஒரு உபகாரத்தை எதிர்பார்த்து, கேட்குமாறு கூறுகின்றான்.
قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَىٰ

நான் உங்களிடம் என்னுடைய குடுமததவர்களின் மீது உபகாரம் செய்வதை தவிர வேறு ஒன்றையும் எதிர் பார்க்க வில்லை. (42:23).

மேலும் இன்று யஜீதை இந்த வஹ்ஹாபிகளும், தேவ்பந்திகளும் தாபிஈ என்றும் அவனை திட்டக்கூடாது என்றும் கூறுகின்றார்கள். ஆனால் இமாம் அஹமத் அவர்களின் மகனார் இமாம் அஹமதிடம் யஜீதை ல'அனத் அனுப்புவதைப்பற்றிய தங்களின் கருத்து என்ன என்று கேட்கும் போது, அல்லாஹ் எவனை சபிக்கின்றானோ, அவனை நான் சபிக்காமல் இருப்பேனா என்று கேட்டார்கள். (பிதாயா வன் நிஹாயா). மேலும் ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்...) அவர்களின் அவையில் ஒரு மனிதர் யஜீதை அமீருல் மூமினீன் என கூறினார். அதை கேட்ட ஹழ்ரத் உமர் யஜீதை போய் அமீருல் மூமினீன் என்கின்றாயே என கேட்டு 20 கசையடி வழங்கினார்கள் (தஹ்தீபுத் தஹ்தீப்). அதனால் யஜீதை திட்டலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யஜீதுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றாலும் அவன் இதில் நேரிடையாக ஈடுபடவில்லை அதனால் அவனை திட்டக்கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். அவன் ஆட்சியில் நடைபெற்றால் அவன் சம்பந்தமில்லையா. இதே நேரத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் அது யஜீத் ஆட்சியில் தான் நடைபெற்றது என்று சொந்தம் கொண்டாட வர மாட்டார்களா? (அவன் தான் இந்த சம்பவத்தை நடத்தினான் என்பது வேறு விஷயம்). இந்த சம்பவத்தால் யஜீத் சந்தோஷித்தான் என்பது தான் அவன் பாடிய எங்கே என்னோடு மூதாதையர்கள்? பத்ரில் கொல்லப்பட்டார்களே அவர்கள்! அவர்களுக்கு பகரம் வாங்கி உள்ளேன் என்று பாடிய கவிதை இன்றும் பாதுகாக்கப்பட்டு அவனுடைய முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கின்றதே? பத்ருப்போருக்கு பகரம் என்ற இவனின் வார்த்தை இவனின் ஈமானையும் கேள்வி குறி ஆக்கிக்கொண்டிருக்கின்றதே? மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுடைய இரு உதடுகளுக்கு மத்தியில் கம்பை வைத்து இது தான் எனக்கும் ஹுஸைன் க்கும் மத்தியில் உள்ள தரஜா என்று கூறினானே இதை எல்லாம் என்னவென்பது. யஜீதை திட்டக்கூடாது, தாபிஈ என்பவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

நபிகளார் ஸல்... அவர்கள் இமாம் அவர்களை பற்றி பல விஷயங்களை கூறி உள்ளார்கள்.
•    சுவனத்து இளைஞர்களின் தலைவர்.
•    மணம்தரும் நறு மலர்.
•    ஹுஸைன் என்னிலிருந்தும் நான் ஹுஸைன் யிலிருந்தும் இருக்கின்றோம்.
•    ஹுசைனை யார் நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிப்பான்.
•    யார் என்னையும், இந்த இருவரையும், இவர்களின் தந்தை, மற்றும் தாயையும் யார் நேசிப்பரோ அவரும் நானும் சுவனத்தில் ஒரே இடத்தில் இருப்போம்.
•    யா அல்லாஹ் இவர்களை நான் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக, யார் இவர்களை நேசிக்கின்றாரோ அவரை நானும் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக.
•    எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றான். அதை பின்பற்றி நடக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். 1 . இறை வேதம் 2 . எனது குடும்பத்தவர்கள். என்னிடம் ஹவுளுள் கவுசரில் என்னிடம் சேர்க்கும் வரை இவர்கள் உங்களை விட்டு இவர்கள் பிரிய மாட்டார்கள்.

இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். நேரமும் காலமும் பத்தாது.

இமாம் ஹுஸைன் அவர்களின் நினைவாக கண்ணீர் சொறிவது கூடும். மாறாக பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, கத்தி வைத்து கீரிக்கொள்வது, சங்கிலி வைத்தி அடித்துக்கொள்வது, மார் தட்டிக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

யா அல்லாஹ் எங்களை அஹ்லே பைத் மீது முஹப்பத் வைக்கும் கூட்டத்தில் ஆக்குவாயாக. இவர்களை பழிக்கும் கூட்டத்தை விட்டு தூரமக்குவாயாக. யார் எல்லாம் யஜீதை நல்லவன் என்கின்றார்களோ, மறுமையில் அவர்களை யஜீதோடு எழுப்புவாயாக. எங்களை இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு எழுப்புவாயாக. ஆமீன், ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

Thanks: http://this-is-truth.blogspot.com/2010/12/blog-post_17.html

வெள்ளி, 16 டிசம்பர், 2011

வந்தது வசந்தம்'


வந்தது வசந்தம்'''' ரபீவுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால்... பெருமானார்(ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது நேசம் கொன்ட முஸ்லீம்கள் பெருமானார் பிறந்த தின மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் ... மீலாது கொன்டாடக்கூடாது மெளலிது ஷரீபு ஓதத் தேவையில்லை என முஸ்லீம் பெயர் கொன்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடும் அவர்களின் (வி) வாதம் என்னவென்றால்.. ஒவ்வொரு நேர பாங்கிலும்- ஒவ்வொரு நேரத்தொழுகையிலும்-ஏன் ஒவ்வொருஅசைவிலும் நாயகம் (ஸல்)அவர்களை நினைவு படுத்திக் கொன்டிருக்கும்போது... தனியாக அவர்களை நினைவு படுத்த விழாக்கள் தேவையா? என்பதுதான். அவர்களுக்கு நாம் கூறுவது இதுதான்' ( 1) இந்த பாங்கை- இந்த தொழுகையை- இஸ்லாமியர்களின் நெறிவாழ்வைப் பெற்றுத் தந்த பெருமானார்(ஸல்) அவர்கள் இவற்றை எப்படி பெற்றார்கள்? இவற்றைச் செயல் படுத்த- சீர் படுத்த  அவர்கள் எத்தகைய தியாகங்கள் புரிந்தார்கள் ? இந்த சமுதாயத்தை நிறுவ முற்பட்டபோது அவர்களிடமிருந்து என்னென்ன அருமையான அற்புதமான நற்குனங்கள்  உலகுக்கு கிடைத்தன? அந்த அரிய அற வாழ்வை-அற்புதமான வ்ரலாற்றை நாம் தெரிய வேன்டாமா? அதனை உலகுக்கு தெரியச் செய்ய வேன்டாமா? (2) மீலாது விழா மேடைகள் இந்த சிறப்பானபணியைத்தான் செய்து கொன்டிருக்கின்றன (3) இறைவா' நீ உன் அருமைத் தூதரை அனுப்பிய மகிழ்சியை கொன்டாட என் நேரத்தை செலவழித்தேன். உன் இறுதித் தூதரின் விழாவைக் கொன்டாட என் ஹலாலான வருமானத்தைச் செலவு செய்தேன் என்று கூறும்போது.... இறைவன தண்டனையா கொடுப்பான்? பாராட்டி பரிசு மழையையல்லவா பொழிவான் எனவே வ்வொரு இல்லங்களிலும் மெளலிதுஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம் ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் அன்புடன்  சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் -அமீரகம்(  நன்றி எல் ஐ டி இஸ்லாமிய தமிழ் மாத இதழ்)

காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி தவ்ஹீத் வாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை


இப்போது துபாயில் பணிபுரிந்து வரும் காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி வஹ்ஹாபிய சிந்தனையிலிருந்து முற்றிலும் விடுபட்டு சுன்னத்-வல்ஜமாஅத்- அகீதாவின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொன்டு இஸ்லாமிய பணிகளை செவ்வனே செய்து வருகிரார்  அவரது மன மாற்றத்திற்கு என்ன காரணம் அவரே விளக்குகிரார்--- தவ்ஹீத் வாதிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களின் செயல்பாடுகள்   எதுவும் எனக்கு பிடிக்கவில்லை  குறிப்பாக  இமாம்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பது  அறவே பிடிக்க வில்லை எதற்கெடுத்தாலும் இவர்கள் குர்.ஆன், ஹதீஸ் மட்டும் போதும் எனக் கூறுகிரார்கள் ஆனால் இஜ்மா என்று ஒன்று இருக்கிறது அதையும் எடுக்க வேண்டும் ரசூலுல்லாஹ் ஸஹாபாக்களையும் பின்பற்றத்தான் சொல்லி இருக்கிறார்கள்  ஆனால் இவர்கள் ஸஹாபாக்களையே  ஏத்துக்கலையே இமாம்களை எப்படி ஏத்துப்பாங்க? குர்.ஆன், ஹதீஸ் மட்டுமல்ல ஸஹாபாக்களையும் இமாம்களையும்  ஏத்துக்கணும் என்பது தான்  என்னுடைய கருத்து அதுதான் சரியான இஜ்மாவாக இருக்க முடியும் ஸஹாபாக்கள் கூறுவது கூட ஹதீஸின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது  இது இந்த தவ்ஹீத் வாதிகளுக்கு  தெரிந்தும் தெரியாததுபோல் ஏன் நடிக்கிறார்கள்  என்பது தான் புரியவில்லை -ஸஹாபாக்கள் தான் இஸ்லாத்தின் உன்மையை தெரிந்தவர்கள்  அவர்கள் ஒரு போதும்  இஸ்லாத்திற்கு மாற்றமாக பேசமாட்டார்கள் ரசூலுல்லாஹ் குர்.ஆனைக் கொன்டு வந்தார்கள் ஹதிசுகளைச் சொன்னார்கள்  சரிதான்  அவற்றை மக்களிடம் கொன்டு வந்து சேர்த்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்பதை மறந்து விடக்கூடாது. ஸஹாபாக்களிடம் கற்றவர்கள் தான் தாபியீன்கள், அதன் பிறகு  தபஹதாபீயீன்கள் ,அவர்களைத் தொடர்ந்து இமாம்கள் இவர்கள்  வழியாகத்தான் இஸ்லாமிய  மார்க்க கல்வி நமக்கு கிடைத்திருக்கிறது 1 ) ஸஹாபாக்களால் தான் குர்.ஆனே தொகுக்கப்பட்டது   ஸஹாபாக்கள் முயற்சி எடுக்கவில்லை என்றால் இன்று குர்.ஆனே நம்மிடம் இருக்காது 2) இன்று ஸஹாபாக்களை குறை கூறுபவர்கள்  குர்.ஆனுக்கு தர்ஜமா எழுதி அதை காசாக்கியிருக்கவும் முடியாது  இஸ்லாமும் குர்.ஆனும் காசாக்குவதற்காக வந்த மார்க்கம் அல்ல  3) தாங்கள் சொல்வதும் செய்வதும் தவறு என்று அவர்களுக்கே  தெரிந்திருக்கிறது ஆனாலும் திருந்த மனம் வரவில்லை அவர்களுக்கு சமுதாயத்தின் மீதோ முஸ்லீம்களின் மீதோ  எந்த பற்றுதலும் கிடையாது அவர்களுக்கு  வயிற்றுப்பாட்டின் மீது தான் உண்மையான பற்றுதல் 4) இவர்களின் குரூரமான  எண்ணங்களை புரிந்து கொள்ளாத ஓர் இளைஞர்  கூட்டம் இவர்களை பின் பற்றுகிறது என்பது தான் வேதனை  இந்த மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் அறியாமையிலிருந்து  இவர்களை மீட்டெடுக்க வேன்டும் 5) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ''''  மார்க்க அறிஞர்களை கைப்பற்றுவதன் மூலம் மார்க்க அறிவை இறைவன் உயர்த்திக்கொள்வான் அறிவீனர்கள் இருப்பார்கள் மக்கள் அவர்களிடத்தில் சென்று மார்க்க தீர்ப்பு கேட்பார்கள்'' இதற்கு  என்ன பொருள் என்றால் சில அறிவீனர்கள் தங்களை பெரிய மார்க்க அறிஞர்களைப் போல காட்டிக் கொள்வார்கள் வாய்ச் சொல்லில் வீரர்களாக இருப்பார்கள் அந்த பேச்சில் மயங்கிய மக்கள் '' ஓகோ இவர் பெரிய மார்க்க அறிஞராக இருப்பார்'' என்று எண்ணி அவரிடம் சந்தேகங்களை கேட்பார்கள் (6) மேலும் நபி(ஸல்) சொன்னார்கள் ''  மார்க்க அறிவே இல்லாமல் அவர்கள்   மார்க்க தீர்ப்பு வழங்குவார்கள்   அவர்கள்  தாங்களும் வழி கெட்டு  மக்களையும் வழி கெடுப்பார்கள்   இப்போது இது தான் நடந்து கொன்டு இருக்கிறது   இந்த அளவுக்கு ரசூலை விட மேலாக தன்னை மதிக்கக் கூடிய ஒரு கூட்டத்தை இவர்கள் உருவாக்கி வைத்திருக்கிரார்கள்   இவர்கள் கூறும் விளக்கம் மட்டுமே உண்மையானது என்று இவர்களை பின்பற்றும் கூட்டத்தினர்  கண்மூடித்தனமாக நம்புகின்றனர் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிற மோசமான நிலை இது இவர்கள் எல்லோரும் இறைவனுக்கு  பதில் சொல்லியே ஆக வேன்டும் ஸஹாபாக்களும், இமாம்களும் கூறியதை மறுத்து இந்த புதுமைவாதிகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்கள் நாளை இறைவனிடம் எந்த பதிலும் கூற முடியாது  (7) 1985, 86 வாக்கில்  மயிலாடுதுறையில் வைத்து பி-ஜெய்னுல் ஆபிதீனை கமாலுதீன் மதனிக்கு அறிமுகம் செய்து வைத்தவன் நான்  அப்போது கமாலுதீன் மதனி, இக்பால் மதனி, போன்றவர்கள்  நாங்கள் மதினாவில் படித்து விட்டு  அங்கே பணம் வாங்கிக் கொண்டு  இங்கே வஹாபியிஸத்தை பரப்புவதாக மக்கள் நினைக்கிறார்கள்  அதனால்  நாங்கள் பேசுவதற்கு சரியான பலன் கிடைக்க வில்லை இங்கே லோக்கலில்   நன்றாக பேசுபவர்கள்  யாராவது இருந்தால் சொல்லுங்கள் '' என்று கேட்டார்கள் அப்போது தான் ----P-ஜைனுல் ஆபிதீன் ------ஐ அறிமுகம் செய்து வைத்தேன்  அண்ணன், தம்பி,இரண்டு பேர் மூத்தவர்  சலாஹுத்தீன் மன்ப.ஈ அவரை நாங்கள் படுத்துகிரோம் இளையவர் ஜைனுல் ஆபிதீனை நன்றாக பேசுவார் நீங்கள் பயன் படுத்திகொள்ளுங்கள் என்றேன் கோட்டாறில் நடந்த முனாளராவில் பிஜே யை  முதன் முதலாக மேடையேற்றி பேச வைத்தார் கமாலுதீன் மதனி அதன் பிறகு விவாதம்  1 நடைபெற்றது வலிமார்களிடம்  வஸிலா தேடலாமா? என்பது போன்ற விஷயங்கள் விவாதிக்கப் பட்டன அதில் P-J - கமாலுதீன் மதனி, அபூ அப்துல்லா,உட்பட பலர் கலந்து கொண்டார்கள் இந்த விவாதத்தை அபூ அப்துல்லா  தனது நஜாத் பத்திரிக்கையில் முழுமையாக வெளியிட்டார் பிறகு அது 6, 7, கேஸட்டுகளாகவும் வெளிவந்தது அவை அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டு தமிழ் முஸ்லீம்களிடம் பிரபலமாக்கப் பட்டது அதன் பிறகுதான்  இந்த இயக்கம் துளிர் விட ஆரம்பித்தது  அதன் பிறகு தான் பிஜே பிரபலமானார்கள்  (8)  ஒரு பெரியவரிடம் போய் ஒருவன்'' நான் பெரிய ஆளாவதற்கு என்ன செய்யனும்? என்று கேட்டார் பெரியவர் சொன்னார் அறிஞர்கள் எதைக் கூறினாலும் அதைத் தவறு என்று கூறு நீ பிரபலமாகி விடுவாய்? அந்த டெக்னிக்கைத்தான்  இவர்கள் கையாண்டு வருகிரார்கள் (9) மக்கள் தங்களை பெரிய  மேதைகளாக நினைக்க வேண்டும் என்பதற்காக  உண்மையான மேதைகளை தறக்குரைவாக பேசுவது புதிய  கருத்துக்களை  உண்மையைப் போல் உரத்து  கூறுவது  போன்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து கொன்டிருக்கிறார்கள் உதாரனம் ''ஒளு இல்லாமல் குரானை தொடலாம் '' சொல்பவர் கமாலுதீன் மதனி  2 ஒளு  இல்லாமல் குரானை தொடுவது கூடாது'' என்று சொல்பவர் அதே கொள்கையை கடைபிடிக்கும் இக்பால் மதனி சில திருமணங்களில்  குத்பா ஓதுவது  சில திருமணங்களில்  குத்பா தேவை இல்லை என்று கூறுவது, சவுதி பிறையை ஏற்றுக்கொள்வது, சிலர் ஏற்றுக் கொள்ளக்கூடாது என இவர்களுக்குள்ளே யே ஏகப்பட்ட குளறுபடிகள் ( 10)  1990 வாக்கிலேயே அந்த கூட்டத்தின் செயல் பாடுகளிலிருந்து ஒதுங்கி விட்டேன். சுன்னத் -வல்- ஜமாஅத் அகீதாவின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொன்டேன் . இவர்களது குளறுபடிகளை கூட இருந்தே கண்டு உணர்ந்தவன் என்ற முறையில் தமிழக முஸ்லீம்களுக்கு நான் கூற விரும்புவது இது தான் 11) கவர்ச்சிகரமான பேச்சுக்களையும் மற்றவர்களை அதிரடியாக தாக்கி பேசுவதையும் நம்பி,அந்த பேச்சுக்களில் மயங்கி, வழி தவறி விடாதீர்கள் குர்.ஆன் ஹதீசுக்கு மேலாக தனி நபர் ஒருவருக்கு முக்கியத்துவம் தராதீர்கள்  12) இஸ்லாம் தர்க்க ரீதியான மார்க்கம் அல்ல ,இஸ்லாம் இரண்டு விஷயங்களால் அடையாளப்படுகிறது ஒன்று கொள்கை மற்றொன்று அமைப்பு
இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி, ஷரியத், பிக்ஹீ சட்டங்களைப் பற்றி விளக்குபவர்கள் தரமுள்ள அறிஞர்களாக இருக்க வேண்டும் தரம்  முக்கியம் நானும் மதரஸாவில்  படித்து விட்டு வந்தேன்  எனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது என்று யாராவது வந்து பேசினால் அதை வாயை பிளந்து கொண்டு கேட்டுக் கொன்டிருப்பது தப்பு  அது தான் இன்றைக்கு நடந்து கொன்டிருக்கிறது   உதாரணமாக, ஜக்காத் சட்டங்கள்- ஜகாத்தை ரசூலுல்லாஹ் எப்படி வழிமுறைப் படுத்தினார்கள் ஸஹாபாக்கள் அதை எப்படி செயல் படுத்தினார்கள் என்பது பிக்ஹீ சட்டத்தின் அடிப்படை. அந்த சட்டத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் ஆயுளில் ஒரு முறை ஜக்காத் கொடுத்தால் போதும் என்று கூறுகிரார்கள் --பிலால்-- பிலிப்ஸ்--  ஏராளமான ஆதாரங்களோடு அழகான ஒரு புத்தகம் ஜகாத்தை பற்றி வெளியிட்டார் இன்டர் நெட்டிலும் வந்தது அதற்கு இதுவரை யாரிடமிருந்தும் பதிலில்லை  -- இந்த வழிகேடர்களைப் பற்றி இறைவன் தெளிவாக கூறுகிரான் '' நுறை இருக்கிறதே, அது குமுழியாகப் போய்விடும் மக்களுக்கு பலனளிக்கக்கூடியது இருக்கிறதே- அது தான் நிலைத்து நிற்கும்'' நிலைத்து நிற்பது சுன்னத்- வல் - ஜமாஅத்- கொள்கைகள்.